search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலய திருவிழா"

    • விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.
    • தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருவிழாகொடியை ஏற்றி வைத்து மறையுரையாற்றிறுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் எட்மண்ட் மறையுரையாற்றுகிறார்.

    விழாவின் 9-ம் நாளான 25-ந்தேதி காலை 7 மணிக்கு இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணியாளர் சைமன் தலைமை தாங்கி திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலியை அருட்பணியாளர் ஆன்டணி பெர்டிக் புரூனோ தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆராதனையை கோட்டார் மறைமாவட்ட செயலாளர் மரிய கிளாட்ஸ்டன் நடத்துகிறார். தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் 10-ம் நாளான 26-ந்தேதி காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் விஜின் பிரைட் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை, மக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • ஏராளமான பங்கு மக்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    தக்கலை :

    முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கேரளா மாநிலம் சுல்தான் பேட்டை மறை மாவட்ட ஆயர் அபீர் தலைமையில் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றப் பட்டது. நிகழ்ச்சிக்கு ஆலய அதிபர் டோமினிக் கடாட்ச தாஸ், இணை அதிபர் ஜேம்ஸ், முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், அருட்ப ணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    விழாவில் இந்து மதத்தை சேர்ந்த பால்மணி உள்ளிட்டோரும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த திருவிதாங் கோடு ஜமாத் செயலாளர் டாக்டர் யூசுப் உள்ளிட்டோரும் மற்றும் ஏராளமான பங்கு மக்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவானது வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி மறையுரை போன்றவை நடக்கிறது. நாளை (3-ந்தேதி) காலை 11 மணிக்கு பல்லாயிரம் பேர் பங்கேற்கும் சமபந்தி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழா கொடியேற்றத்துடன் தொட ங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆடம்பர கூட்டுத்திருப்பலி, 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலம் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி விழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பெவ்வத்துபறம்பில் திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றினார்.

    பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை சாம் மாத்யூ மறையுரையாற்றினார். புனித அல்போன்சா சிறப்பு நவநாள் தக்கலை மறை மாவட்ட ஆவண காப்பாளர் ஜோஷி குளத்திங்கல் ஜெபித்தார். புன்னையடி புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தை சதீஷ்குமார் ஜாய், மேலபெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குதந்தை குரூஸ்கார்மல், தக்கலை மறை மாவட்ட பொருளாளர் ஜோண்சிலாஸ், தக்கலை புலரி அச்சக மேலாளர் வினு ஜோசப் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    விழாவின் 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோ ட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்தி ருப்பலி நிறைவேற்றுகிறார். 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு படந்தாலுமூடு திருஇருதய மறைவட்ட ஆலய பங்குதந்தை தோமஸ்நேசன் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட சீனாய் தியான குழு அருட்தந்தை அனில்ராஜ் தலைமையில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடக்கி றது.

    விழாவில் 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 12.30-க்கு தேர்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை புனித அல்போன்சா திருத்தல பங்குதந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல், துணை பங்குதந்தை ஜார்ஜ் கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், கைக்காரர்களான ராஜையன், ஜோபெலிக்ஸ் மலையில் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.
    • இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு தேர்ப் பவனி ஆகியவை நடை பெறும்.

    கன்னியாகுமரி :

    திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளையில் குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 99-வது ஆண்டு பங்கு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு திருப்பலி, 7.30 மணிக்கு கல்லறைத் தோட்டம் அர்ச்சிப்பு, மாலை 5 மணிக்கு கொடி பவனி, 6.30 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.

    நாளை மறுநாள் காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி போன்றவை நடைபெறும். 2-ந்தேதி காலை 7 மணிக்கு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குனர் அருட்பணியாளர் ெஜரால்டு ஜெஸ்டின் தலைமையில் மறைக்கல்வி மன்ற சிறப்புத் திருப்பலி நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது. 8-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு தேர்ப் பவனி ஆகியவை நடை பெறும்.

    விழாவின் இறுதி நாளான 9-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் திருவிழா திருப்பலி, 10 மணிக்கு மலை யாளத்திருப்பலி, 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை வெ.சகாயஜஸ் டஸ், இணைப் பங்குதந்தை ரா.சத்தியநாதன், பங்கு இறை மக்கள், அருட்பணிப் பேர வையினர் செய்து வருகின்றனர்.

    • ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. தமிழ்மைய இயக்குனர் ஜெகத் கஸ்பார் ராஜ் மறையுரையாற்றுகிறார்.
    • 4-ந்தேதி காலை திருப்பலியும், அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு சகாய மாதா நவநாள் தேர் பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய திருவிழா 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    குமரிமாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் திருவிழா வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    2-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி, கொடியை ஏற்றிவைக்கிறார். பசிலிக்கா அதிபர் டோமினிக் எம்.கடாட்சதாஸ் முன்னிலை வகிக்கிறார். அதைத்தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. தமிழ்மைய இயக்குனர் ஜெகத் கஸ்பார் ராஜ் மறையுரையாற்றுகிறார்.

    4-ந்தேதி காலை திருப்பலியும், அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு சகாய மாதா நவநாள் தேர் பவனி நடக்கிறது. 8-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெப மாலை, திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரத்தினம் தலைைம தாங்குகிறார்.

    9-ந்தேதி காலை திரு முழுக்கு திருப்பலி நடைபெ கிறது. இதில் அருட்பணியா ளர் ஜோஸ் ராபின்சன் மறை யுரையாற்றுகிறார். 10-ந் தேதி முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட பொறுப்பு ஆயர் ஆன்றனி பாப்புசாமி தலைமை தாங்குகிறார். மாலை 6 மணி திருப்பலிக்கு மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார். மனித உரிமை வக்கீல் அருட்பணியாளர் எம்.சி. ராஜன் மறையுரை யாற்றுகிறார்.

    அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. 11-ந் தேதி காலை 9 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார். நாஞ்சில் பால் இயக் குனர் அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் மறை ரையாற்றுகிறார். 11 மணிக்கு மற்றும் இரவு 8 மணிக்கு அன் னையின் அலங்காரத் தேர் பவனி நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபர் டோமினிக் எம் கடாட்சதாஸ், இணை அதிபர் ஜெயக்குமார். பங்கு பேரவை துணைத் தலைவர் ஆண்டனி வால்ஜின், செயலாளர் புஷ்பலதா, துணை செயலாளர் பெலிக்ஸ் ஆண்டனி ஜார்ஜ், பொருளாளர் ஏசுதாஸ் மற்றும் பங்கு மக்கள், இல்ல அருட் பணியாளர்கள், பக்த சபைகள் அருட் சகோதரிகள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • சாயல்குடி அருகே புனித பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
    • திருவிழா திருப்பள்ளியும், அற்புத திருப்பலி தேர் பவனியும் நடந்தது.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் ஊராட்சி பெரியநாயகிபுரம் புனித பரலோக அன்னை ஆலய தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அசன விருந்து, ஜெபமாலை பவனி, திருப்பலி, ஒப்புரவு வழிபாடு, புது நன்மை, நற்கருணை பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன் தினம் சப்பரபவனியை தொடர்ந்து திருவிழா திருப்பள்ளியும் அற்புத திருப்பலி தேர் பவனியும் நடந்தது. இதில் பெரிய நாயகிபுரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம், சாயல்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.

    ×